பிரபல கன்னட நடிகை புற்றுநோயால் மரணம்

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 11:24 am
veteran-actress-l-v-saradha-passed-away

மூத்த கன்னட நடிகை எல்.வி.சாரதா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 

தேசிய விருது பெற்ற நடிகையான இவர், பெங்களூருவில் உள்ள சங்கரா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 78.

இவர் கணியம்மா என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். மேலும் நடிப்பிற்காக மாநில விருதையும் அவர் பெற்றுள்ளார். இவர் வம்சா விருக்‌ஷா, அதி சங்கராச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 1977ல் ரஜினிகாந்த்துடன் ஒன்டு பிரேமடா கடே என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close