அஜய் தேவ்கன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 11:53 am
de-de-pyaar-de-first-look-poster-out

அஜய் தேவ்கன், நடித்த 'De De Pyaar De'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்  தபூ மற்றும் ரகுல் ப்ரீட் ஆகியோருடன் அஜய் தேவ்கன்,  இரு கார்களின்  மேல் தனது கால்களை வைத்தபடி இருக்கிறார். இதன் மூலம் படத்தில் இரு பெண்கள், அஜய் தேவ்கன்னிற்கு   ஜோடியாக இருப்பார்கள் என தெரிகிறது. மேலும் பின்னனி காட்சிகளின் மூலம் அஜய் இரு வேறு நாடுகளை சேர்ந்த , இரு பெண்களுடன் காதல் கொண்டிருப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கலாம்  என‌ தோன்றுகிறது. மேலும் அகில் அவி இயக்கும் இந்த திரைப்படத்தை புஷன் குமார் , கிருஷான் குமார், உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.

அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் "வீட்டில் இதை முயற்சிக்க‌  வேண்டாம் என்றும் , இந்தப் படம் மே மாதம் 17 ம் தேதி திரைக்குவரும்” என எழுதியுள்ளார்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close