அவர்களுக்கு ஓப்பனிங் இடத்தை விட்டுக்கொடுக்க தயார்: ஆரோன் பின்ச்

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 01:03 pm
aaron-finch-willing-to-sacrifice-top-order-slot-on-steve-smith-and-david-warner-s-return

டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்த உடன் தொடக்க ஆட்டக்காரர் எனும் இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வந்தால் அதை செய்ய தயார் என்று ஆரோன் பின்ச் கூறியுள்ளார். 

2018ம் ஆண்டு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம். இதில் சிக்கிய அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோருக்கு ஒரு ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. 

இந்நிலையில் அவர்களின் தடைகாலம் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பை போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்துக்கொள்ள இருக்கின்றனர். இதற்கு முன்பாக அவர்கள் இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றனர்.

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இவர்கள் பெயர் ஆஸ்திரேலிய அணியுடன் இணைக்கப்படவில்லை. எனவே நேரடியாக உலகக்கோப்பை தொடரில் ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்துக்கொள்வார்கள் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவர்கள் அணிக்கு திரும்பிய உடன் தனது தொடக்க ஆட்டக்காரர் இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் அதனை செய்ய தயார் என தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் பேசும் போது, "தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை என்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது, சதம் அடிக்க முடியாது என்றெல்லாம் யோசிக்க கூடாது. அணிக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்" என தெரிவித்துள்ளார். 

இவர் சமீபத்தில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close