ஜீ சினிமா விருதுகள்:

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 04:38 pm
zee-cinema-awards-2019

மும்பையில் நடைபெற்ற Zee திரைப்பட விருது  வழங்கும் விழாவில்  பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  இவ்விழாவிற்கு வந்த பிரபலங்கள் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் அணிந்து வந்து பார்வையாளர்களுக்கு விருந்தளித்தனர்.

அவர்களுக்கு  சிவப்புக் கம்பள வரவேற்பு   அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பினை ஏற்ற பிரபலங்கள்  பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு உற்சாக போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன்,சோனம் கபூர், ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இந்த அலங்கார அணிவகுப்பில் கலந்துக் கொண்டனர்.

இவ்விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது , பத்மவத் திரைப்படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பஞ்சாலிக்கும், சிறந்த நாயகிக்கான விருது தீபிகா படுகோனுக்கும், சிறந்த நடிகருக்கான  விருது ரன்பீர் கபூருக்கும் , துணை நடிகருக்கான விருது விக்கி கௌசலுக்கும், சிறந்த  நடிப்பிற்கான விருது இஷான் கட்டர்  மற்றும் ஜான்வி கபூருக்கும் , சிறந்த வில்லனுக்கான விருது தபுவுக்கும், சிறந்த பின்னனி பாடகருக்கான விருது  யசிர் தேஷாய் , வீபா ஷ‌ரஃப் ஆகியோர் விருதுக்கான பட்டியலில்இடம் பிடித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close