தென் சென்னையில் போட்டியிடும்  பவர் ஸ்டார் சீனிவாசன்:

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 05:32 pm
powerstar-srinivasan-contest-in-loksabha-election

இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்து வருவதாகவும், இந்த கட்சி தமிழகத்தில் 10 தொகுதிகளில் நிற்கவுள்ளதாகவும், தென் சென்னையில்  இந்திய குடியரசு கட்சியின் கட்சியின் சார்பில் லோக் சபா தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும் சமீபத்தில்  தெரிவித்திருந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன்.
 
மேலும் தென் சென்னை தொகுதியில் தனக்கு போட்டியாக யாருமில்லை என்றும், இந்த தேர்தலை  தைரியமாக சந்திக்கவுள்ளதாகவும்  தெரிவித்த பவர் ஸ்டார் ,  தென் சென்னை தொகுதி மக்களின் செல்லப் பிள்ளையான தன்னை, லோக் சபா தேர்தலில் மக்கள்  வெற்றி பெற வைப்பார்கள் என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில் இந்திய குடியரசு கட்சியின் ஏ பிரிவு மாநில தலைவர் சூசை, சில தகவல்களை செய்தி சேனல் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் இந்திய குடியரசு கட்சியின் ஏ பிரிவுதான்  தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் , மகாராஷ்டிராவை பிறப்பிடமாகக் கொண்ட இதன் கொள்கை வரைவுகள் அம்பேத்கரால் உருவாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் லோக் சபா தேர்தலில் மாநில துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனைத்தான் தென் சென்னையில் நிறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close