தடையை மீறி  திரைக்கு வந்த  அக்னி தேவி!

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 06:17 pm
agnidevi-in-violation-of-the-ban

அக்னி தேவி  ஒரு அரசியல் நாடக திரைப்படமாகும். ஜே.ஆர்.ஆர் மற்றும் ஸ்டாலினின் ஜெய் பிலிம் புரொடக்சன்ஸ் மற்றும் சீயோடா ஸ்டுடியோஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட,  இந்த படம் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  ஆகியோரால் இயக்கப்பட்டிருந்தது.

மேலும் இதில் பாபி சிம்ஹா , ரம்யா நம்பீசன் மற்றும் மது ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஜெயஸ் இசையமைத்த  அக்னி  தேவி திரைப்படம்  மார்ச் 22ல் திரைக்கு வர உள்ளதாக  அறிவித்திருந்தன‌ர்.

இந்நிலையில் , பாபி சிம்ஹா இயக்குனர் ஜான் பால்ராஜுக்கு எதிராக நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார் அதில்``பல இடங்களில் என் முகத்தை மார்ஃபிங் செய்துள்ளனர், டிரெய்லரில் வந்த குரலும் தன்னுடையதில்லை"  என கூறியிருந்தார் பாபி சிம்ஹா . 

மேலும் இதன் உண்மைத் தன்மையை கண்டறியும் வரை , படத்தை வெளியிடக்கூடாது என படத்திற்கு தடைவாங்கியுள்ளதாகவும் அதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பாபி சிம்ஹா கூறியிருந்த  நிலையில், இன்று இந்தத் திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close