தொடக்கப் பள்ளியிலிருந்து , உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் டோரா :

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 11:19 am
doraa-in-cinema

கார்ட்டூன் கதாபாத்திரமாக இருந்த டோரா, தற்போது வெள்ளித்திரையில் வலம் வர போகிறாள்.  'டோரா அண்ட் தி லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்டு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அனிமேஷனாக அல்லாமல், ஒரு லைவ் ஆக்‌ஷன் படமாக உருவாகி கொண்டிருக்கிறது.  ஜேம்ஸ் பாபின் இயக்கத்தில், இசபெல்லா மோனர் டோராவாக நடிக்கும், இந்த படம்  வரும்  ஆகஸ்ட் 2-ம் தேதி திரையிடப்பட உள்ளதாக‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , தொலைந்து போன தன் பெற்றோர்களைத் தேடிச் செல்லும் டோராவுடன், புஜ்ஜி (பூட்ஸ்), குள்ள நரி (ஸ்வைப்பர் தி ஃபாக்ஸ்), டீயகோ போன்ற முக்கிய கதாபாத்திரங்கள்  இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனவாம். தொலைந்த தங்க நகரத்தையும் கண்டுபிடிப்பதுதான் படத்தின்  கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது எனப் படக்குழு கூறியுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close