ஏ.எல். விஜய் படத்தில் ஜெயலலிதாவாக  நடிக்கிறார் கங்கணா ரணவத்:

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 04:48 pm
kangana-ranaut-to-play-jayalalithaa

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு,  விஷ்ணு வர்தன் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், பாகுபலி கதையாசிரியரான விஜேந்தர பிரசாத் வசனம் எழுதவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும்  ஜெயலலிதாவின் பிறந்த நாளான   பிப்.24 ல் தலைவி படத்திற்கான  அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தலைவி படத்தின் நாயகியாக நடிக்க‌ கங்கணா ரணவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார், என அதிகார பூர்வமாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர், தானு வெட்ஸ் மானு உள்ளிட்ட படங்களில்   மூலம் பாராட்டுபெற்றவர்.

மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கங்கணா ரணவத் பெற்றுள்ளார். இவரின் பிறந்த நாளான இன்று 'தலைவி படத்தின் நாயகியாக நடிக்க‌ கங்கணா ரணவத் ஒப்பந்தம்' செய்யப்பட்டுள்ளார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

 மேலும் தலைவி படத்திற்கான படப்பிடிப்பை ஏப்ரலில் ஆரம்பிக்க படக்குழு முடிவு செய்துள்ள‌தாக தெரிகிறது. படப்பிடிப்பினை மைசூர் மற்றும் பெங்களூரில் இருக்கலாம் எனவும்  தகவல் வெளியாகியுள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close