'NGK' திரைப்படத்தின்  டப்பிங் வேலையை துவங்கினார் சூர்யா!

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 05:51 pm
surya-started-his-dubbing-work

"தானா சேர்ந்த கூட்டம்"  திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'NGK' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறாரார். இதனை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.

 சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர், இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'NGK' திரைப்படத்தின்  டப்பிங் வேலையை துவங்கியுள்ளார் சூர்யா.  இத்தகவலை  படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 

— S.R.Prabhu (@prabhu_sr) March 22, 2019

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close