நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த ராதாரவி!

  முத்து   | Last Modified : 25 Mar, 2019 10:54 am
controversy-about-nayantara-senior-actor-radharavi-expressed-regret

நடிகை நயன்தாரா குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். மேலும், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர்காலம்' பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, 'நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், அந்த பக்கம் சீதையாவாகவும் நடிக்கிறார்' என அழுத்தமா சொல்லிட்டு, 'முன்பெல்லாம் பாக்குற‌வங்களை கும்பிடுற‌வங்களத்தான் சாமியா நடிக்க வைப்பாங்க, ஆனால்.. இப்போ----- ' என மிகவும் மோசமான வார்த்தைகளால் சித்தரித்து பேசினார். இவரது பேச்சுக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்,  நயன்தாரா குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ள நடிகர் ராதாரவி, 'கொலையுதிர்காலம்' பட டிரைலர் வெளியீட்டு விழாவில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், 'என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்' என்றும் அவர் கூறியிருந்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close