தன் காதலை வெளிப்படுத்திய ஆலியா பட்!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 12:53 pm
alia-bhatt-says-i-love-you-publicly

64 -வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடந்தது. இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் இந்தி முன்னணி நடிகர் -நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இவ்விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் , சிறந்த நடிகை விருதை ‘ராஷி’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஆலியாபட் வென்றார். இந்த படத்தில் அவர் பெண் உளவாளி வேடத்தில் நடித்திருந்தார். சிறந்த படமாக ‘ராஷி’யும், அப்படத்தை இயக்கிய மேக்னா குல்சார் சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


விழா மேடையில் பேசிய ஆலியாபட், ராஷி படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்த அவர் , கடைசியாக  ரன்பீர் கபூருக்கு தனது காதலை முதல் முறையாக சொன்னார். அதனை கேட்ட  ரன்பீர் கபூர், வெட்கம் கலந்த சிரிப்பை மெளனமாக வெளிக்காட்டினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது..
 

A post shared by Ranbir Kapoor Universe (@ranbirkapooruniverse) on

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close