வாரிசுகள் இணைந்து உருவாக்கும் மரக்கார்

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 06:00 pm
the-heirs-will-combine-together-in-marakkaarar-movie

ஆசீர்வாத்  தயாரிப்பில் இயக்குனர் ப்ரியதர்ஷ‌ன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் திரைப்படம் "மரக்கார்" இப்படத்தில் மோகன்லாலும், அவரது மகன் பிரணவ் மோகன்லாலும் சேர்ந்து நடித்து வருகிறனர். அதுமட்டுமின்றி  படத்தின் கதாநாயகிகளாக  இயக்குனரின் மகளான கல்யாணி ப்ரியதர்ஷ‌ன் மற்றும் கீர்த்திசுரேஷ் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தின் ப‌டப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் கேரளாவில்  முடித்துள்ள  நிலையில் விஷுவல்எஃப்க்ட் வேலைகளுக்காக பூனே செல்ல உள்ளனர். இந்த படத்தின் விஷுவல் எஃப்க்ட் வேலைகளை இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகன் செய்ய உள்ளாராம்.

மேலும் திரு ஒளிப்பதிவாளராகவும், சாபு சிறில் கலை இயக்குனராகவும்  பணியாற்றியுள்ள இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில்  உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் 16 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்ப்படை தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட ப‌டமாக உருவாகி வருகிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close