நான் ஸ்டாப் ஹிப்ஹாப்பில் வேங்கமவன் பாடல் வீடியோ வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 06:03 pm
vengakmavan-video-song

நட்பே துணை திரைப்படத்திலிருந்து, ஹிப்ஹாப்  ஆதி பாடிய "வேங்கமவன்'  பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. சின்ன பொண்ணு, ஹிப்ஹாப் ஆதியின் பின்னனி குரலில்அமைக்கப்பட்டுள்ள இப்பாடல் 3.47 நிமிடங்கள் செல்லக்கூடியது. 

இந்த வீடியோ "வேங்கமவன் ஒத்தைல நிக்க , மொத்தமா வராங்களே" என ஆரம்பிக்கும், நான் ஸ்டாப் ஹிப்ஹாப்பாக அமைந்து இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

"மீசையை முறுக்கு" படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் அடுத்த படம் "நட்பே துணை". இந்த திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கௌசல்யா,  கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 மேலும், இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபேர்வல் சாங் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close