'NGK' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 06:20 pm
ngk-movie-release-date

"தானா சேர்ந்த கூட்டம்" படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'NGK' படத்தில் நடித்துள்ளார். இதனை செல்வராகவன் இயக்குகிறார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள, இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'NGK' படம் மே31ல்  ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது . இதனை இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close