நேர்கொண்ட பார்வை செட்டிலிருந்து வெளியான முதல் புகைப்படம்

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 11:16 am
nerkondaparvai-new-photo

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பாலிவுட்டில் ஹிட் அடித்த "பிங்க்" படத்தின் ரீமேக்கான "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடந்து வருகிறது. யுவன் இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய போனி கபூர் தயாரித்து வருகிறார்.. 

இத்திரைப்படத்தில் வித்யாபாலன், ஷ்ரத்தாஸ்ரீநாத், ஆன்ட்ரியா, அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிசந்தரன் , டில்லி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் அழகிய போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படமே நேர்கொண்ட பார்வை செட்டிலிருந்து வெளியாகிய முதல் புகைப்படமாகும்.

மேலும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 10-ல்  ரிலீஸ் செய்யப்படும் ,என  படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்  அறிவித்துள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close