'ரிட்டையர் போலீஸாக'  விவேக் நடித்திருக்கும் ‘வெள்ளைப்பூக்கள்’ ட்ரைலர் வெளியீடு  

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 12:32 pm
vellai-pookal-trailer

நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படம் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது. அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து சார்லி, பூஜா தேவரியா உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளர். 

ஏற்கனவே,  'வெள்ளை பூக்கள் படத்தின்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ‘வெள்ளைப்பூக்கள்’ ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  த்ரில்லர் படமாக  வெள்ளைப்பூக்கள் படத்தில் ரிட்டையர்ட் போலீஸாக  விவேக் நடித்துள்ளார்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close