'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 12:32 pm
ar-rahman-composing-song-for-avengers-endgame-hollywood-movie

பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்திற்காக சிறப்பு பாடல் ஒன்றை இசையமையக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ்' படத்தின் 4ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. வருகிற ஏப்ரல் 26ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறப்பு பாடலுக்கு இசையமைக்க உள்ளார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மார்வெல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.  இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது. வருகிற ஏப்ரல் 1ம் தேதி இப்பாடல் ரிலீசாகிறது. 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் உள்ளது என்ற செய்தி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும், முக்கியமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும் போது, "எனது குடும்பத்திலே மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். எனவே  மிகச்சிறந்த, ரசிகர்களுக்காக திருப்திகரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பாடலை உருவாக்க இருக்கிறேன். கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close