ஐரா திரைப்படத்தின்  இணையதள வெளியீட்டு உரிமை யாருக்கு?

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 04:32 pm
airaa-digital-rights-have-been-acquired-by-primevideo

சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான்  'ஐரா'.  நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக்,  டீசர் மற்றும் ட்ரைலர்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும்  இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், ஐரா திரைப்படத்தின் இணையதள வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக தற்பொழுது  KJR தயாரிப்பு  நிறுவனம் ட்விட் செய்துள்ளனர். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close