நீ மாஸுனா? நா டபுள் மாஸ்... பேய் இசையுடன் வெளிவந்த காஞ்சனா 3 ட்ரைலர் !

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 12:02 pm
kanchana-3-official-trailer

 "காஞ்சனா 3"  படத்தின் செகண்ட் சிங்கிளை, சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில்,  படத்தின்  ட்ரைலர்  பின்னனியில்  பேய்  இசையுடன் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த ட்ரைலரில் த்ரில்லர் கலந்த ஆக்ஸன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதுடன்,  " நீ மாஸூனா? நா டபுள்  மாஸ்" என்னும் ராகவாவின் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள‌  படம் காஞ்சனா 3.  லாரன்ஸுக்கு ஜோடியாக  வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர்   நடித்துள்ளனர். 

இவர்கள் தவிர, கோவை சரளா,  தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.  எஸ்.எஸ் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.  மேலும் காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close