அசுரன் படத்தில் வில்லனாக நடிக்கும் இயக்குனர் யார் தெரியுமா!

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 03:45 pm
director-balaji-shakthi-debut-as-villain-of-asuran-movie

அசுரன் திரைப்படம்  வெற்றி மாறன்  மற்றும் தனுஷ் கூட்டனியில் உருவாகி வரும் நான்காவது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு  திருநெல்வேலி மாவட்டம் மற்றும்  கோவில்பட்டியை  சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

மேலும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும்  கருணாஸ் மகன் கென் கருணாசாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜீ.வீ.பிரகாஷ் இசை அமைக்கிறார். 

இந்நிலையில், அசுரன் படம் குறித்து பேசியுள்ள இயக்குனர்  வெற்றி மாறன்:  பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் அசுரன் திரைப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்றும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறார் எனவும், நடிகர் பசுபதி நாயகியின் சகோரனாக நடித்து வருகிறார் என கூறியுள்ளார்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close