ரன்வீர் கபூருடன் ஆலியாபட் டேட்டிங் சென்றாலும், எனக்கு கவலை இல்லை : சோனியா ரஸ்தான் 

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 04:14 pm
soni-razdan-said-about-alia-bhatt-dating-with-ranbir-kapoor

பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் கபூரும் ,ஆலியாபட்டும் ஒன்றாக  விழாக்களுக்கு  செல்வதும் , சேர்ந்துள்ள  புகைப்ப‌டங்களை  பகிர்வதுமாகிய அவர்கள் இருவரின் செயல், இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளதோ என்கிற எண்ணத்தை பொதுவெளியில் தோற்றுவித்து வந்தது.


இந்நிலையில் 64 -வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கும் , சிறந்த நடிகைகான‌  விருது ஆலியாபட்டுக்கும் வழங்கப்பட்டது.  அவ்விழா மேடையில் பேசிய ஆலியாபட், ரன்பீர் கபூருக்கு தனது காதலை முதல் முறையாக வெளிப்படையாகத் தெரிவித்தார். அதனை கேட்டதும்  ரன்பீர் கபூர், வெட்கம் கலந்த சிரிப்பை மெளனமாக வெளிக்காட்டினார்.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

 


 இது குறித்த  கேள்விக்கு பதிலளித்துள்ள ஆலியாபட்டின் தாயார் சோனியா ரஸ்தான் : ஆலியாபட், ரன்பீர் கபூருடன் டேடிங் சென்றால் கூட எனக்கு கவலையில்லை என்றும், அவளின் மகிழ்ச்சி மட்டும் தான் தனக்கு முக்கியமென்றும், மேலும் காதல் விவகாரம் என்பது ஆலியா பட்டின் தனிப்பட்ட விஷ‌யம், அதில் நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என கூறியுள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close