இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 05:57 pm
veteran-director-mahendran-hospitalized

மூத்த இயக்குநரும், நடிகருமான‌ மகேந்திரன், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் மற்றும் ஜானி போன்ற திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னர் பத்திரிகையாளராக பணியாற்றி. மகேந்திரன், துர்வாசர் என்ற பெயரில் சமூக பிரச்னைகளை "சோ" ஆசிரியராகப் பணியாற்றிய துக்ளக் பத்திரிகையில் எழுதி வந்தார்.

அதுமட்டுமின்றி "போஸ்ட்மார்ட்டம்" என்ற பெயரில் அந்தக் காலகட்டத்தில் தமிழில் வெளியான திரைப்படங்களை, அதில் உள்ள குறைபாடுகளை, அபத்தங்களை அவரது விமர்சனமாக முன்வைத்து மக்களிடம் பிரமலமடைந்தார். மேலும் சமீபத்தில், தெறி , திரு.சந்திரமவுலி, சீதாக்கதி, பேட்ட‌ மற்றும் நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ளார் .

இந்நிலையில் வயது முதிற்வினால் ஏற்படும் உடல் நல குறைவு  காரணமாக மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. 

இத்தகவலை அவரது  மகன் ஜான் மகேந்திரன், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் தந்தை விரைவாக குணமடைய இறைவனை வேண்டிக்கொள்ளுமாறு   கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close