சில நேரங்களில் அழுவதைப் போல உணர்கிறேன்: மனம் திறக்கும் ஆலியா பட்!

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 05:34 pm
alia-bhatt-opens-up-about-suffering-from-anxiety-says-sometimes-i-feel-like-crying-for-no-reason

கடந்த சில மாதங்களாக நான் பதட்டத்துடனே இருந்து வருவதாகவும், சில நேரங்களில் அழுவதை போன்று உணர்வதாகவும் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார். 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. சமீபத்தில், சிறந்த நடிகைக்கான விருதை ‘ராஷி’ படத்தில் நடித்த ஆலியாபட் வென்றார். 

பிலிம்பேர் விருது விழா நிகழ்ச்சி தொடர்பான ஒரு பேட்டியில் நடிகை ஆலியாபட் பேசுகையில், "கடந்த சில மாதங்களாக நான் கவலையாக உணர்கிறேன். ஏன் என்று தெரியவில்லை. ஆனால், இது மன அழுத்தம் இல்லை. இந்த கலவை கடந்த ஆறு மாதங்களாக வருவதும், போவதுமாக இருக்கிறது. 

எனது தங்கைக்கு ஏற்பட்ட நிகழ்வு என்னில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது டைரியை பார்த்து நான் நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன். அவரது வாழ்க்கையில் இருந்து நான் விழிப்புணர்வை பெற்றுள்ளேன். 

என்னை அறியாமல் நான் சில நேரம் அழுவதை போன்று உணர்கிறேன். ஆனால், எனது வேலைப்பளுவினாலும், மற்ற விஷயங்களில் ஈடுபடுவதன் மூலமாக என்னை நான் சரிசெய்துகொள்கிறேன். நான் படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதால் சில நேரங்களில் யாரையும் சந்திக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனது நண்பர்களிடம் நான் இதை பற்றி பேசியுள்ளேன். அவர்கள் எனக்கு சில வார்த்தைகளை கூறுவது சற்று ஊக்கத்தை தருகிறது" என்று  நடிகை ஆலியா பட் அந்த பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close