வர‌லக்‌ஷ்மி சரத்குமாரின் டாட்டூ பதிவு

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 10:46 am
varalaxmisarathkumar-twitt-with-tatoo

வர‌லக்‌ஷ்மி சரத்குமார் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூக பிரச்னைகளிலும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கும் தைரியமாக குரல் கொடுத்து வருகிறார்.   இவர்  இயக்குநர் சர்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’,  விமலுடன் ‘கன்னி ராசி’,  வினய்யின் ‘அம்மாயி’,  விஷாலின் ‘சண்டக்கோழி 2’,  விஜய்யின் ‘சர்கார்’, ஜெய்யின் ‘நீயா 2’,  சரத்குமாரின் ‘பாம்பன்’,  மனோஜ்குமார் நடராஜனின் ‘வெல்வெட் நகரம்’ என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சினிமா மீதான காதலை சொல்லும் விதமாக முகமூடியை டாட்டூ-வாக போட்டுள்ள வர‌லக்‌ஷ்மி சரத்குமார், டாட்டூவுடனான போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   அதில்  பொய்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை மற்றவர்களுக்காகவே வாழ்கிறோம்.  எந்த முகமூடியும் இல்லாமல், நமக்கான அமைதியான வாழ்க்கையை வாழுவோம் என  பதிவிட்டுள்ளார்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close