ஜெயலலிதாவாக நடிக்க‌ ரூபாய். 24 கோடியை சம்பளமாக பெறும் கங்கணா ரணவத்?

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 03:35 pm
kangana-ranaut-charging-rs-24-crore-salary-for-jayalalithaa-biopic

 ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு,  விஷ்ணு வர்தன் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், பாகுபலி கதையாசிரியரான விஜேந்தர பிரசாத் வசனம் எழுதவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தலைவி படத்தின் நாயகியாக நடிக்க‌ கங்கணா ரணவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார், என அதிகார பூர்வமாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர், 'தானு வெட்ஸ் மானு' உள்ளிட்ட படங்களில் மூலம் பாராட்டுபெற்றவர்.  மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கங்கணா ரணவத் பெற்றுள்ளார். 

இந்நிலையில் தலைவி படத்தில் நடிப்பதற்காக கங்கணா ரணவத்  ரூபாய் 24 கோடியை சம்பளமாக பெற உள்ளார் என ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து பேசியுள்ள தலைவி படத்தின் தாயரிப்பாளர் விஷ்ணு வர்தன் " கங்கணா ரணவத் திறமையுள்ள ஓர் நடிகை, அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் தகும் என தெரிவித்துள்ளார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close