பார்வையால் அன்பை வெளிப்படுத்தும்,  நடிகர் பார்த்திபனின் ட்விட் பதிவு 

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 04:33 pm
parthiban-twitt-about-his-daughter


தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் -  சீதா தம்பதியினருக்கு  இரண்டு  மகள்களும் , ஒரு மகனும், உள்ளனர். இவர்களின்  இளைய மகள் கீர்த்தனாவிற்கும்  பிரபல திரைப்பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும், இயக்குநருமான அக்ஷய் என்பவருக்கும்  கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.அதனை  தொடர்ந்து தற்போது மூத்த மகள் அபிநயாவின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

அபிநயாவிற்கும்  பழம்பெரும் நடிகர்  எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனும், நடிகர் எம்.ஆர்.வாசுவின் மகள் வழி பேரனுமான நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் சமீபத்தில்  திருமணம் நடைபெற்றது.சென்னையில் கோலகலமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் அபிநயாவின் திருமண  புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன் :  
"அந்த ஒரு பார்வை , அண்ட சராசரங்களின், அன்பின் அர்த்தங்களை  சொல்லவல்லது!" என்னும் கருத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் திருமண சடங்கின் போது தந்தைக்கு பாத பூஜை செய்யும் புகைப்படமாகும்.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close