வர‌லக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்பு தளத்தில்  பயங்கர தீவிபத்து; இருவர் பலி 

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 04:36 pm
varalaxmi-s-movie-shooting-accident


வர‌லக்‌க்ஷ்மி சரத்குமார் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூக பிரச்னைகளிலும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கும் தைரியமாக குரல் கொடுத்து வருகிறார்.  இவர்  இயக்குநர் சர்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’,  விமலுடன் ‘கன்னி ராசி’,  வினய்யின் ‘அம்மாயி’,  விஷாலின் ‘சண்டக்கோழி 2’,  விஜய்யின் ‘சர்கார்’, ஜெய்யின் ‘நீயா 2’,  சரத்குமாரின் ‘பாம்பன்’,  மனோஜ்குமார் நடராஜனின் ‘வெல்வெட் நகரம்’ என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, கன்னடத்தில் 'ரணம்' என்னும் படத்தில் நடித்து வருகிறார் வர‌லக்‌க்ஷ்மி.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரை அடுத்த பாகலூரு பகுதியில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் ரணம் படத்திற்கான 'சண்டை காட்சி' படப்பிடிப்பின் போது, எதிர்பாரதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது, அருகிலிருந்த எரிவாயு சிலிண்டர் தீடிரென வெடித்துச் சிதறியுள்ளது.  

இந்த விபத்தில், படப்பிடிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த  5 வயது குழந்தையும் மற்றும் அவரின் தாயும் உயிரிழிந்தனர். மேலும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close