இயக்குனர் சுசீந்திரனின் பிறந்தநாளை கொண்டாடிய கென்னடி கிளப் படக்குழு

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 04:52 pm
suseendar-birthday

சுசீந்திரன் இயக்கத்தி உருவாகி வரும் திரைப்படம் கென்னடி கிளப்.  இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் . பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்தப்  படத்திற்கு இசையை டி.இமான் அமைத்து வருகிறார். 

மேலும் கென்னடி கிளப் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மிகப்பெரிய கபடி குழுக்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும்  கடந்த 10 நாட்களாக விழுப்புரத்தில் உள்ள ஸ்டேடியத்தில் படப்பிடிப்பு நடந்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில் கென்னடி கிளப் திரைப்படத்தின், இயக்குனர் சுசீந்திரனின் பிறந்தநாளை ஒட்டி நடிகர் சசிகுமார் மற்றும் படக்குழுவினர்,  இயக்குனரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close