இயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கை வரலாறு!

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 09:44 am
director-mahendran-life-history

அலெக்சாண்டர் என்ற இயற்பெயரை கொண்ட இயக்குநர் மகேந்திரன், சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் 1939 - ஆம் ஆண்டு, ஜீலை 25 -ஆம் தேதி பிறந்தார்.

ஆரம்பத்தில் படங்களுக்கு கதை, வசனம் எழுதிவந்த அவர், ரஜினிகாந்த் நடித்த, "முள்ளும் மலரும்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட  படங்களையும், உதிரிப் பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி போன்ற தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களையும்  இயக்கியுள்ளார் மகேந்திரன். சிவாஜி கணேசன்  நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம், விஜயகாந்த் நடித்த கள்ளழகர் உள்பட 26 படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார்.

இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். துக்ளக்கில் அவர் பணியாற்றியபோது காட்டுப்பூக்கள், அர்த்தம் என்ற டிவி நாடகங்களையும் எடுத்துள்ளார். மகேந்திரன் எழுதிய "சினிமாவும் நானும்" என்ற நூல் 2004-ஆம் ஆண்டு வெளியானது. புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையை தழுவி ”உதிரிப்பூக்கள்” என்ற மிகச்சிறந்த படத்தை எடுத்தார்.

மகேந்திரன் இயக்கிய "நெஞ்சத்தை கிள்ளாதே" படம் 3 தேசிய விருதுகளை வென்றது. சிறந்த மாநில மொழி திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு பிரிவில் தேசிய விருதுகளை வென்றது. மோகன், சுஹாசினி நடிப்பில் உருவான இந்தப்படம் 1980-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

மொத்தம் 12 படங்களை இயக்கியுள்ள மகேந்திரன், தன்னுடைய கடைசி படமாக அரவிந்த்சாமி, கெளதமி, ரஞ்சிதா நடித்த ”சாசனம்” என்ற படத்தை 2006-ஆல் இயக்கினார்.

நடிகராகவும், அவதாரம் எடுத்த மகேந்திரன், விஜய் நடித்த ’தெறி’, ரஜினியின் ’பேட்ட’, நிமிர், பூமராங் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close