De De Pyaar De டிரைலர் வெளியிடப்படுள்ளது !

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 10:55 pm
de-de-pyaar-de-official-trailer

அஜய் தேவ்கன் பிறந்த நாள் பரிசாக   'De De Pyaar De' படத்தின் ட்ரைலர் வெளியிட்டுள்ளது.  இதில் 50 வயதான அஜய் தன்னைவிட இளைய வயதுடைய பெண்ணான ரகுல் ப்ரீத்தியை காதலிக்கிறார். அவர்கள் இருவரும் அஜய்யின் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அங்கு அஜயின் முன்னால் காதலி தபூ  இருக்கிறார். இருவருக்கிடையே  மாட்டிக்கொண்டு, அஜய் படும் பாடுதான் இந்த படத்தின் கதை என்பதை இந்த ட்ரைலரே உணர்த்துகிறது. 

முன்னதாக, அஜய் தேவ்கன், தபு மற்றும் ரகுல் ப்ரீத் நடித்த 'De De Pyaar De'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை   வெளியிட்டுள்ளது.  அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்  தபூ மற்றும் ரகுல் ப்ரீத் ஆகியோருடன் அஜய் தேவ்கன்னை இரு கார்களின்  மேல் தனது கால்களை வைத்தபடி நிற்பதன்  மூலம் படத்தில் இரு பெண்கள் அஜய் தேவ்கன்னை  ஜோடியாக இருப்பார்கள் என தெரிந்தது. மேலும் பின்னனி காட்சிகளின் மூலம் அஜய் இரு வேறு நாடுகளை சேர்ந்த இரு பெண்களுடன் காதல் கொண்டிருப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்களாம் என்கிற தோற்றத்தையும் ஏற்படுத்தியது.  அகில் அவி இயக்கும் De De Pyaar De  திரைப்படத்தை புஷன் குமார் , கிருஷான் குமார், உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close