'விவாகரத்து' : வழக்கு தொடரும் பிரியங்கா சோப்ரா!

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 03:28 pm
priyanka-chopra-is-going-to-file-a-case-against-the-magazine-that-rights-about-her-personal-life

முன்னாள் உலக அழகியும், பாலிவுட், ஹாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, விவாகரத்து செய்யப்போவதாக, அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள பிரியங்கா தரப்பு, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. 

இந்தியாவை சேர்ந்த, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, 36. தழில் திரை உலகில் அறிமுகமான அவர், பின் ஹிந்தி திரைப்படங்களில் கொடிகட்டிப்பறந்தார். அங்கிருந்து ஹாலிவுட் சென்ற பின், அங்கேயே செட்டிலாகிவிட்டார். தன்னை விட, 10 வயது சிறியவரான, நிக் ஜோனஸை, கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் புரிந்தார். 

இருவரும், அடிக்கடி பார்ட்டிக்களுக்கு செல்வதும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுமாக இருந்து வருகின்றனர். அமெரிக்காவின் பல முக்கிய இடங்களுக்கு சென்று ஊர் சுற்றும் வேலையில், இருவரும் பிசியாக உள்ளனர். இந்நிலையில், பிரியங்காவும், ஜோனசும், காதலித்த சில காலங்களிலேயே திருமணம் செய்து கொண்டதாகவும், இதன் காரணமாக, இருவரிடையே புரிதல் இல்லாமல், தற்போது மனக்கசப்பில் வாழ்வதாகவும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிக்கை ஒன்று கட்டுரை வெளியிட்டது. 

அதில், பிரியங்காவின் செயல்கள், அவரது கணவரின் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை எனவும், அதன் காரணமாக, திருமணம் ஆன, நான்கு மாதங்களிலேயே விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், அந்த கட்டுரையில் கூறப்பட்டது. 

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பிரியங்கா - ஜோனஸ் தம்பதி, இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். தவிர, ஜோனஸின் குடும்ப உறுப்பினர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பிரியங்கா பகிர்ந்து கொண்டார். 

இதற்கிடையே, பிரியங்கா சோப்ரா, தன் கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக வதந்தியை கிளப்பிய பத்திரிக்கை நிறுவனத்திற்கு எதிராக, மான நஷ்ட வழக்கு தொடர்வது குறித்து, அவர் தீவிரமாக ஆலோசித்து வருதாக, பிரியங்காவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close