மோக‌ன்லால் மீது புகார் கொடுத்த காவல்துறையினர்

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 11:59 am
the-police-who-complained-to-mohanlal

பிருத்விராஜ் இயக்கத்தில், மோக‌ன்லால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் லூசிபர்.  இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும்.  விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் தமிழ் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது.  இதை தொடர்ந்து படத்தின் விளம்பரத்துக்காக போஸ்டரை லூசிபர் படக்குழு வெளியிட்டுள்ளனர்.  அதில் மோகன்லால் சீருடை அணிந்திருக்கும் காவல்துறை அதிகாரியின் மார்பின் மீது கால் வைத்திருப்பது போன்ற காட்சி உள்ளது. 

இந்நிலையில், லூசிபர்  போஸ்டரை  தடை செய்ய வேண்டும் எனக் கேரள போலீஸ் கூட்டமைப்பு முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளது.  இதில், "மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள நடிகர் இதுபோன்ற‌ காட்சிகளில் நடிப்பது பார்ப்பவர்களை ஊக்கப்படுத்துவது போல் அமையும்" எனத் தெரிவித்துள்ளனர். மேலும் `காவல்துறை அதிகாரிகளைத் தாக்குவது தவறு' என்ற வாசகம்  திரைப்படங்களில் இடம்பெற வேண்டும் எனக் கேரள முதல்வரிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close