'அவர் மாஸ்டர் .. நாம் அவருடைய சீடர்கள்' தமிழில் ட்விட் செய்துள்ள அமிதாப் 

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 12:19 pm
amitabh-bachchan-twitt

தமிழ்வாணன் இயக்கும், 'உயர்ந்த மனிதன்' திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்து வருகின்றனர்.  இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா அவ்வப்போது அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துவருகிறார்.

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் சிவாஜி கணேசனின் புகைப்படத்தின் அருகே எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் "குருவின் நிழலில் இரண்டு சீடர்கள்.  நானும், சூர்யாவும்... சிவாஜி தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஒரு அடையாளம்.  அவருடைய புகைப்படம் சுவற்றை அலங்கரித்தது.  நான் மரியாதையுடன் அவர் காலை தொட்டேன் எனவும், அவர் மாஸ்டர்... நாம் அவருடைய சீடர்கள்" என தமிழில் பதிவிட்டுள்ளார்.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close