ரசிகர்களிடம் விஜய் நடந்த கொண்ட விதம் குறித்த வீடியோ வைரல்

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 01:55 pm
thalapathy-63-shooting-spot-video

மெர்சல்’ திரைப்படத்தைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் "தளபதி 63" திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.  மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 
  
மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மேலும் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த விஜய்யை அவரது ரசிகர்கள் ஓடி வந்து கட்டிப்பிடித்தனர்.  இதனை அடுத்து ரசிகர்களை பவுன்சர்கள் தடுக்க முயன்றபோது, பரவாயில்லை என அவர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close