'தடம்' பாடலின் நியூ வர்ஷன் ரிலீஸ்

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 01:38 pm
vidhi-nadhiyae-reprise-version

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், அருண்விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தடம்.  இந்த படத்தில்அருண்விஜய் இரு வேறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.  மேலும் தன்யாஹோப், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள தடம் படத்திற்கான இசையை அருண் ராஜ் அமைத்துள்ளார்.  மார்ச் 1ல் திரைக்கு வந்த இந்த படம் நல்ல ரேட்டிங்கை பெற்றது.

மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அருண் விஜய் மற்றும் படக்குழுவினர்  "தடம் வெற்றி பயணம்" என்னும் பெயரில் சுற்றுப்பயணம் செய்து வந்தனர்.  இதன் தொடர்ச்சியாக தடம் திரைப்படத்தின் பாடலான "விதி நதியே" என்னும் பாடலின்  நியூ வர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த வீடியோவில் படத்தின் சில காட்சிகளும், இந்த பாடலை இசையமைப்பாளர் அருண் ராஜ்  பாடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close