கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ள தனுஷ்

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 06:21 pm
dhanush-karthik-subbaraj-finally-set-to-begin

நீண்ட  எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.  பேட்டை படத்தில் ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்பராஜ்  தற்போது ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஓர்  திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது இருவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இதற்கிடையில் இந்த படத்திற்கான ஆடிஷன் மதுரையில் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும்  தனுஷ்  கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாக உள்ள இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு லண்டனில் விரைவில் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை ஒய்-னாட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

 ஏற்கனவே நடிகர் தனுஷ்,  வெற்றி மாறன் இயக்கத்தில் "அசுரன்" மற்றும்  துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிப்படாத திரைப்படம் ஆகியவற்றில்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close