ஜப்பானில் வெளியாக உள்ள "சாஹோ"

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 06:25 pm
saaho-release-in-japan

சுஜீத்ரெட்டி இயக்கத்தில்  பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'.  இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய்  இசையமைத்துள்ளார்.   

300 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாகியுள்ள  இப்படத்தின், படப்பிடிப்பை மும்பை, ஹைதராபாத், துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.  மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய இந்தப்படம் ஆகஸ்ட் 15ல்  திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில்  'சாஹோ' படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியாகவுள்ள நிலையில்,  படத்தின் விளம்பரத்திற்காக  ஜப்பான் சென்று  நடிகர் பிரபாஸ் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close