மாறுபட்ட கதை களத்துடனான திரைப்படங்களை இயக்குபவர் பாலா. இவர் ஏற்கனவே விக்ரம்-சூர்யாவை வைத்து பிதாமகன், ஆர்யா-விஷாலை வைத்து 'அவன் இவன்' ஆகிய இரட்டை நாயகர்களைக் கொண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அந்த வரிசையில் மூன்றாவது முறையாக அதர்வா-ஆர்யாவை கதைநாயகர்களாக வைத்து மூன்றாவது இரட்டைக் கதாநாயகர்களைக் கொண்டத் திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரதேசி, நான் கடவுள் உள்ளிட்ட வித்தியாசமான திரைப்படங்களை ரசிகர்களுக்கு தந்த பாலாவின் அடுத்த படம் குறித்து, அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
newstm.in