நயன்தாராவின், அடுத்த  ரிலீஸ் கோடை விடுமுறைக்கு

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 03:35 pm
nayanthara-s-next-release

நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் கொலையுதிர்காலம் திரைப்படத்தை சக்ரி டோலேட்டி இயக்குகிறார். வுமன் சென்ட்ரிக் படமான இதில் நடிகை பூமிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை பூஜா எண்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த  அறிக்கையை வெளியிட்டுள்ளது எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட்.  அதில்  மே இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் 'கொலையுதிர்காலம்' திரையிடப்பட உள்ளதாகவும், சென்ஷார் வேலைகள் முடிவடைந்த பின்னரே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close