கபில் தேவ் உடனான புகைப்படத்தை வெளியிட்டார் ஜீவா    

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 04:22 pm
actor-jiiva-with-kapil-dev-photo

1983ல்  இந்திய கிரிக்கெட் அணி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று, முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கதையை மையமாக வைத்து  '83' என்ற திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்குகிறார். 

இப்படத்தில், கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், 1983 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் குவித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில், நடிகர் ஜீவாவும் நடிக்கவுள்ளனர்.  மேலும் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் மகள் அமியா தேவ் இப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். இப்படம் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்  நடிகர் ஜீவா.  

இந்நிலையில்,  இந்தியாவின் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் அணி கேப்டனான  கபில் தேவ்வை சந்தித்துள்ள  ஜீவா.  இருவரும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close