சூப்பர் ஸ்டாருடன் இணையும் பிரபல காமெடியன்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 11:14 am
rajini-s-167th-film-darbar

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 167வது திரைப்படமான  தர்பாரில் பிரபல நடிகர் யோகிபாபு நடிக்க உள்ளார்.

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநயாகியாக நயன்தாரா இணையவுள்ளார்.  அனிரூத் இசையமைக்கிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தர்பாரில், ரஜினிகாந்த் போலீஸ் மற்றும் சமூக சேவகர் என இரட்டை வேடங்களில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் முன்னணி நடிகராக வலம் வரும் யோகி பாபு ரஜினிகாந்த் நடிக்கும்  படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.  மேலும் மும்பையில் தொடங்கியுள்ள தர்பார்  படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் யோகிபாபு கலந்து கொள்ளவிருக்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close