100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ள லூசிபர் !

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 05:29 pm
lucifer-box-office-collection

பிருத்விராஜ் இயக்கத்தில்  மோக‌ன்லால் நடிப்பில்  திரைக்கு வந்துள்ள படம் லூசிபர்.  இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும்.  விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திரைக்கு வந்து எட்டே நாளில் உலகம் முழுவதிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது லூசிபர்..

அதன்படி அமெரிக்காவில் ரூ. 3.48 கோடி,  லண்டனில் 2.30 கோடி என பல்வேறு நாடுகளில் மொத்தம் 44 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளதாக லூசிபர் படக்குழு பெருமிதம் கொள்கின்றனர். இளம் இயக்குனரான நடிகர் பிருத்விராஜ் எடுத்துள்ள திரைப்படம் செய்துள்ள சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.  

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close