மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 11:17 am
radharavi-caught-in-controversy

நடிகை நயன்தாரா குறித்து பேசியதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என ராதாரவி கூறியிருப்பது, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

 'கொலையுதிர்காலம்' பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, 'நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், அந்த பக்கம் சீதையாவாகவும் நடிக்கிறார்' என அழுத்தமா சொல்லிவிட்டு, 'முன்பெல்லாம் பாக்குற‌வங்களை கும்பிடுற‌வங்களத்தான் சாமியா நடிக்க வைப்பாங்க, ஆனால்.. இப்போ----- ' என மிகவும் மோசமான வார்த்தைகளால் சித்தரித்து பேசியிருந்தார். 

இவரது கருத்திற்கு பலதரப்பட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி: நான் பேசிய எந்த கருத்திற்கும் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் பேசியதில் உண்மை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள், நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க இயலாது, படத்தில் நடிக்க விடவில்லையென்றால் சீரியலில் நடிப்பேன்  என கூறியுள்ளார்.  இவரின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close