அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கினர் சசிகுமார்

  முத்துமாரி   | Last Modified : 11 Apr, 2019 12:11 pm
sasikumar-started-shooting-for-his-next-film

நடிகர் சசி குமார்  நடிக்கும் புரோடக்க்ஷன-3 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது

நடிகரும் இயக்குனருமான, சசிகுமார் ரஜினியின் பேட்டை படத்தை தொடர்ந்து, கென்னடி கிளப், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  இவற்றையடுத்து கல்பதரு பிக்சர்ஸ் ராம்மோகன் தாயரிக்கும் புரோடக்க்ஷன்-3 படத்தில்  நடிக்கிறார்.   இத்திரைப்படத்தை நிர்மல்குமார் இயக்குகிறார், இவர் ஏற்கனவே  விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வந்த சலீம் படத்தை இயக்கியுள்ளார். 

ஆக்க்ஷன் படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றதுடன், படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.  அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.  இப்படம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சசிகுமார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close