பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் லூசிபர். இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய, நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது, இந்நிலையில், திரைக்கு வந்து சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது லூசிபர்..
பிருத்விராஜ், இதுவரை நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார், இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கிய, முதல் படமான லூசிபரின் வெற்றியை எண்ணி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள பிருத்விராஜ். தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை திரை உலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பாஸிலையும், மோகன்லாலையும் வைத்து எடுக்கப்பட்ட காட்சிக்கான, முதல் நாள் படப்பிடிப்பின் போது, பள்ளி மாணவன் தேர்வெழுதும் நிலையில் தான் இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
Imagine you’re on your first day on sets as a debut director..and the first shot you take..needs you to brief these two legends of Indian cinema! #Lucifer pic.twitter.com/o19v9cagNw
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) April 11, 2019
newstm.in