’அலாவுதீனின் அற்புதக் கேமரா’ படத்தின் சூப்பர் அப்டேட்

  கண்மணி   | Last Modified : 13 Apr, 2019 12:33 pm
super-update-of-alavudinin-arpudha-camera-upcoming-movie

பிளாக் காமெடி டைப்பில் வந்த 'மூடர் கூடம்’ படம் மூலமாக தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் நவீன், தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்கிற படத்தை இயக்கி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒயிட் ஷேடோஸ் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.  இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனின் ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

ஒரு புகைப்படக் கலைஞனின் வாழ்க்கையில் நடக்கும் அற்புதங்களை சொல்லும் இந்தப் படத்தில் புகைப்படக்கலைஞன் கதாப்பாத்திரம் ஏற்று கதையின் நாயகனாகவும் நடிக்கிறார் நவீன்.  இதில் ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடிக்க, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். 

ஏற்கனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றதுடன், ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் பைலட் டீசரை, நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில், அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படத்தின் ‘இவனே இவனே ஹீரோ’ என்ற சிங்கிள் டிராக் பாடல் வரும் ஏப்.15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close