'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்

  கண்மணி   | Last Modified : 14 Apr, 2019 02:35 pm
nenjamundu-nermaiyundu-oduraja-first-look

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகிவரும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தில், சின்னத்திரை ஹீரோ  ரியோ கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.  

மேலும், ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட வேலைகளை எட்டியுள்ள இப்படத்திற்கான, டைட்டில் அறிவிப்பு வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்த‌து.

இதனை தொடர்ந்து, இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், தமிழ் புத்தாண்டான இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில்  ரியோவும், ஆர்.ஜே.விக்னேஷ்காந்தும் பல,செய்தி சேனல்களுடன் கூடிய, தொலைக்காட்சி பெட்டிகளுட‌ன் இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close