நடிகர் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்

  கண்மணி   | Last Modified : 14 Apr, 2019 03:54 pm
a1teaserfromtoday

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநயகனாக தன்னை உயர்த்தி கொண்டவர் நடிகர் சந்தானம்.  இவரின் தில்லுக்கு துட்டு 2 படம் காமெடி கலந்த ஹாரர் படமாக அமைந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது. 

இதனையடுத்து, ஜான்சன் இயக்கத்தில், சந்தானம் A1 படத்தின் நாயகனாக நடித்து வருகிறார். மேலும், தாரா அலிஷா பெர்ரி, மொட்ட ராஜேந்திரன், மனோகர், சுவாமிநாதன்,சாய்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ராஜ்நாரயனன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, கோபி ஜகதேஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த மாதம், A1 படத்தின் முதல் பார்வை போஸ்டர்  வெளியிடப்பட்டது.  அதனை தொடர்ந்து, A1 படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட‌ உள்ளதாக சந்தானம், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close