ஏப்ரல் 19ல் மலரும் ‘வெள்ளைப்பூக்கள்’ : விவேக் ட்விட்

  கண்மணி   | Last Modified : 16 Apr, 2019 11:03 am
vellaipookal-release-on-april-19

நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படம் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது. அமெரிக்காவில் ஒளிப்பதிவு செய்யப்படுவதால், இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து சார்லி, பூஜா தேவரியா உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். 

ஏற்கனவே, விவேக் ஹீரோவாக நடித்துள்ள வெள்ளை பூக்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில் ஏப்ரல் 19ல்  'வெள்ளைப்பூக்கள்’ திரையிடப்பட  உள்ளதாக ட்விட் செய்துள்ளார் விவேக்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close