வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது: நடிகர் சூர்யா அட்வைஸ்!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 12:50 pm
surya-tweet

உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது என்று நடிகர் சூர்யா வாக்களித்த பின்னர் கூறியுள்ளார். 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்தனர். 

அந்த வகையில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை தியாகராயநகர் இந்தி பிரச்சார சபாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

பின்னர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close